திருப்பூர் இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்  இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழகம் முழுவதும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர் மாவட்ட பாமக சார்பில் திருப்பூர் குமரன் சாலை கோர்ட் ரோடு சந்திப்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோர்ட் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் கோரிக்கை மனுவையும் கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இட ஒதுக்கீடு வழங்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!