வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு  கட்டாய தாலி கட்டிய இளைஞர் கைது

வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு  கட்டாய தாலி கட்டிய இளைஞர் கைது
X

சிறுமிக்கு தாலி கட்டியதால் கைது செய்யப்பட்ட விக்னேஷ்

வாணியம்பாடி  அருகே வீட்டில் தனியாக இருந்த உறவுக்கார சிறுமிக்கு  கட்டாய தாலி கட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி, காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் விக்னேஷ்( வயது26) இவர் பெங்களூரில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தந்தையை இழந்து தாயுடன் வசித்து வரும் உறவினரின் மகள் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி 14 வயது சிறுமியிடம் கடந்த 2 ஆண்டுகளாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சிறுமியின் தாயிடம் சிறுமியை திருமணம் செய்து தருமாறு விக்னேஷ் கேட்டதாகவும்,14 வயதில் திருமணம் செய்ய முடியாது 18 வயது பூர்த்தியான பின்னர் பார்க்கலாம் என சிறுமியின் தாய் விஜயலட்சுமி கூறியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள இளைஞர் விக்னேஷ், அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் கையில் தாலியுடன் அவசர அவசரமாக புகுந்து சிறுமியை கட்டாயப்படுத்தி கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.

ஏதும் அறியாது தவித்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு வந்த சிறுமியின் தாய், மகளுக்கு நேர்ந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து பின்னர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் இளைஞர் மீது 14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டியது, சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல்,பெண்ணை மானபங்கம் படுத்துதல், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது, சிறுமியின் தாயை அசிங்கமான வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யபட்டு சிறையில் அடைத்தனர்.

வீட்டிற்குள் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!