சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது.

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது.
X

போக்சோவில் கைது செய்யப்பட்ட விஜய்

வாணியம்பாடியில் பள்ளிக்குச் சென்ற சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பொன்னேரி குரும்பர் வட்டம் பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 26), கன்டெய்னர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 6 மாதமாக வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் (15 வயது) மாணவியை ஆசை வார்த்தை கூறி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி திறந்தவுடன் கடந்த 21ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விஜய் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!