வாணியம்பாடியில் உலக தாய்ப்பால் வார விழா

வாணியம்பாடியில் உலக தாய்ப்பால் வார விழா
X

உலக தாய்ப்பால் வார விழாவில் வட்டார மருத்துவர் அலுவலர் பசுபதி 

வாணியம்பாடியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் வட்டார மருத்துவர் அலுவலர் பசுபதி பங்கேற்றார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜாப்ராபாத்தில் நேற்று உலக தாய்ப்பால் வார விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பொறுப்பு கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கலந்துகொண்டு பேசினார். பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கான ஊட்டச்சத்து தாய்பாலில் இருந்து தான் ஆரம்பமாகிறது எனவே ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் இதனால் குழந்தைகள் புத்திக்கூர்மையும், நோயில்லாமல் ஆரோக்கியமாக வளர மிகவும் காரணமாக அமைகிறது என்று கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில் சுகாதார பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாசகி மேற்பார்வையாளர் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!