100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கவில்லை என பெண்கள் சாலை மறியல்

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கவில்லை என பெண்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

வாணியம்பாடி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கவில்லை எனக் கூறி பெண்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட சிக்கணாங்குப்பம் ஊராட்சியில் திகுவபாளையம் பகுதியில் 400க்கும் மேற்பட்டோருக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்பொழுது 20 பேருக்கு மட்டுமே வேலை வழங்குவதாகவும் மீதம் உள்ள நபர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கவில்லை எனக் கூறியும் முறையாக ஊதியம் வழங்கவில்லை என கூறி திடீரென திம்மாம்பேட்டை வாணியம்பாடி செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திம்மாம்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது