வாணியம்பாடி அருகே இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வாணியம்பாடி அருகே இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
X
வாணியம்பாடி அருகே இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு; சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை காவல் நிலையத்தில் புகார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட நரசிம்மபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் இவருடைய மகள் ஹமாவதி (வயது 22), பூங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் இவருடைய மகள் மகன் சிலம்பரசன் (வயது 26) இவர் ஜேசிபி ஒன்று வைத்து தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஜீவா என்ற குழந்தை உள்ளது. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், சிலம்பரசன் வெளியில் சென்றிருந்தபோது ஹமாவதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் உறவினர்கள் வந்து பார்த்த பொழுது ஹமாவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது தொடர்பாக ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பெண்ணின் தந்தை கோவிந்தராஜ் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!