வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது
X

கள்ளச்சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்ட பெண்

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 கள்ளச்சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில் வாணியம்பாடி மது அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி, எஸ். ஐ பழனி ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழு நேதாஜி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரியன் உறவினரான குப்புசாமி மனைவி வள்ளியம்மாள் (வயது 47) என்பவரை பிடித்தனர். அவரிடமிருந்து 100 பாக்கெட் கள்ளச்சாராயம் மற்றும் 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நடுவர் நீதிபதி காளிமுத்து வேல் முன்பு ஆஜர்படுத்தி, வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்...

Tags

Next Story