உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ தலைமையில் வேட்பு மனு தாக்கல்

உதயேந்திரம் பேரூராட்சியில் எம்எல்ஏ  தலைமையில்  வேட்பு மனு தாக்கல்
X

எம்எல்ஏவுடன் ஊரவலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்

உதயேந்திரம் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ தலைமையில் ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது

இறுதி நாளான இன்று திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வார்டு வேட்பாளர்கள் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் தலைமையில் ஊர்வலமாக சென்று உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

உதயேந்திரம் திமுக பேரூராட்சி செயலாளர் செல்வராஜ் உட்பட 10க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்