வாணியம்பாடியில் வீடுகளில் கொள்ளையடித்த நபர் கைது

வாணியம்பாடியில் வீடுகளில் கொள்ளையடித்த நபர் கைது
X

வாணியம்பாடியில் பிச்சை எடுப்பது போல் நாடகமாடி பொருட்களை கொள்ளையடித்து சென்ற நபர்  கைது 

வாணியம்பாடியில் பிச்சை எடுப்பது போல் நாடகமாடி பொருட்களை கொள்ளையடித்து சென்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பிச்சை எடுப்பது போல் வீட்டிற்குள் திடீரென நுழைந்து யாரும் இல்லை என்றால் பொருட்கள் மற்றும் பணங்களை கொள்ளையடித்து செல்வதாக வாணியம்பாடி காவல் துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து நமது இன்ஸ்டாநியூஸ் தளமும் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் பயாஸ் என்பவர் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் லேப்டாப் செல்போன் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றான். இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் சத்யா என்பார் வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத பயன்படுத்தி அவர் வீட்டில் இருந்த ஏடிஎம் கார்டுகள் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் 1 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றான். தொடர்ந்து பிச்சை கேட்பது போல் நடித்து வாணியம்பாடி முழுவதும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் கோரி வந்தனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த மாராபட்டு அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் தகவல் அளித்தார் அதன்பேரில் விசாரணை நடத்தியதில், அவனுடய ஊர் உடைய ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் எனவும் வேலன் ( வயது 30) எனவும் தெரியவந்தது. அவர் பிச்சை எடுப்பது போல் நடித்து வீடு வீடாகச் சென்று கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது,

இதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பேரில் அவர் திருடிச் சென்ற கம்மல், ரூபாய் 7000 பணம், ஏடிஎம் கார்டுகள், தங்கநகை உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!