இழப்பீடு தொகையை  பெற்றுத்தராததைக் கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தர்ணா

இழப்பீடு தொகையை  பெற்றுத்தராததைக்  கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தர்ணா
X

 நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்காததைக் கண்டித்து வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்றம் உத்தரவிட்டு 11 மாத காலம் ஆகியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை 11 மாத காலமாகியும் உரியவரிடம் இருந்து பெற்று தராத அலுவலர்களை கண்டித்து வாணியம்பாடி வட்டாச்சியர் அலுவலகம் முன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தர்ணா

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மலர் இவரது மகன் மணிவண்ணன் இவர் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரிடம் கடந்த 2005 ஆம் ஆண்டு குடிநீர் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்ததாக கூறப்படுகிறது, அப்பொழுது குடிநீர் எடுக்கும் கிணற்றில் உள்ள மின்மோட்டர் பழுதாகிய நிலையில் அதை சரிசெய்ய மணிவண்ணன் கிணற்றில் இறங்கிய போது எதிர்பாராவிதமாக மணிவண்ணன் இறந்தார். இந்நிலையில், இதுகுறித்து மணிவண்ணனின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மணிவண்ணின் குடும்பத்தினருக்கு 4லட்சத்து 52 ஆயிரத்து 760 ரூபாய் வழங்கவும், அந்தத் தொகையை உடனடியாக வழங்காவிட்டால் அதை வழங்கும் போது அதற்கான வட்டி 12% வீதம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டனர். இந்த நிலையில் இதுவரை 11 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால்,தங்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு தொகையான 11 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவில்லையெனவும், நீதிமன்றம் உத்தரவிட்டு 11 மாத காலம் ஆகியும் இதுவரையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய மணிவண்ணனின் குடும்பத்தினர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி நகர காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பின்னர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மணிவண்ணன் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் வட்டாச்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!