வாணியம்பாடி: ரூ.7லட்சம் வெளிமாநில மதுபானங்கள், கள்ளசாராயம் பிடிபட்டது!

வாணியம்பாடி: ரூ.7லட்சம் வெளிமாநில மதுபானங்கள், கள்ளசாராயம் பிடிபட்டது!
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான வகைகள்

வாணியம்பாடி அருகே வீட்டில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபானம், கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வீட்டை ராஜ்குமார் என்பவர் வாடகைக்கு எடுத்து மதுபான பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் அவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர் 25 பேர் கொண்ட குழு மேட்டுப்பாளையம் பகுதியில் ராஜ்குமார் வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தனர் அப்போது போலீசார் வருவதை கண்ட நபர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு தப்பி ஓடினர். அதன் பின்னர் போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த சுமார் 1000 லிட்டர் சிறு சிறு பாகங்களாக கட்டி வைத்திருந்த கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட கள்ளச்சாராயம்

அதன் பின்பு மற்றொரு அறையில் சென்று சோதனை செய்த போது, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மதுபான பாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் என 4500 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்துக்கு ஆட்டோக்கள் மூலம் கொண்டு சென்றனர்.

தப்பி ஓடிய ராஜ்குமார் மற்றும் அவருடன் கள்ளச்சாராயம் மற்றும் மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை பிடிக்க வாணியம்பாடி டி.எஸ்.பி. பழனி செல்வம் தலைமையில் தனிப்படை அமைத்து உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் அரசு மது கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் அனைத்து மாவட்ட எல்லைகளில் வாகன சோதனைகளும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் தமிழகத்திற்கு காவல்துறையை மீறி எடுத்து வரப்பட்டு தமிழகத்தில் விற்கப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...'

வாணியம்பாடி அருகே 7 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!