வாணியம்பாடி - நியூ டவுன் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறுத்தம்

வாணியம்பாடி - நியூ டவுன் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறுத்தம்
X

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டும் கட்டமான பணியை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு செய்தார்

வாணியம்பாடி - நியூ டவுன் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரூ.1 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டும் கட்டமான பணியை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அங்கிருந்து ஒப்பந்ததாரர்களிடமும், அதிகாரியிடமும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார் எம்எல்ஏ மற்றும் ரயில்வே துறைகளில் உடன் இருந்தனர். சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் கூறியதாவது:-

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையின்படி சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதாக இருந்தது முதலில் நிறுத்தப்பட்டது அது இன்னும் நிலுவையில் உள்ளது.

ஏனெனில் ரயில்வே சுரங்க பாதை அமைய உள்ள இடத்தின் மிக அருகில் ஏரி உள்ளது. மேலும் அதில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாலம் கட்டும் பகுதியின் அருகாமையில் தான் வெளியேறிச்செல்லும் நிலையும் உள்ளது.

இதனால் உபரி நீர் சுரங்கப் பாதையில் நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆதலால் சுரங்கப்பாதை கட்டும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் வழங்கி உள்ள மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதற்காக மாநில அரசு நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றி இடத்தை ஒதுக்க வேண்டும்.

மேலும் ரயில் நிலையம் வளர்ச்சிக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்டமாக ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் நிலைய அலுவலக கட்டிடம் பணிகள் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நவீன கட்டிடங்கள் கட்டப்படும், பயணிகள் நிற்பதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதி பணிகளும் செய்து தரப்படும் என்று கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!