வாணியம்பாடியில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய தன்னார்வலர்கள்

வாணியம்பாடியில்  ஆக்சிஜன் செறிவூட்டும்  கருவிகளை வழங்கிய தன்னார்வலர்கள்
X

வாணியம்பாடியில் முத்தமிழ் மன்ற அறக்கட்டளையினர் இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினர்

வாணியம்பாடியில் பொது பயன்பாட்டுக்காக இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை முத்தமிழ் மன்ற அறக்கட்டளையினர் வழங்கினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, அதன் தொடர்ச்சியாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைத்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தமிழக முதல்வர் பொது நிவாரண நிதி வழங்குமாறு அறிவித்திருந்ததன் பேரில் பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.

வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் முத்தமிழ் மன்ற அறக்கட்டளை தலைவர் க.சுரேஷ் அவரது சகோதரர் க.ரமேஷ் ஆகியோர் இணைந்து 2 செறிவூட்டிகளை வழங்கியுள்ளனர். இதனை வாணியம்பாடி முத்தமிழ் மன்ற நிர்வாகிகள் வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி அவர்களிடம் பொது பயன்பாட்டுக்காக வழங்கினர்.

Tags

Next Story