சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு
வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொரோனா தடுப்பு குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிரமாக பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, நோய்க்குறி அணுகுமுறை (Syndromic approach) என்னும் திட்டத்தை செயல்படுத்தி கடந்த ஒரு வார காலமாக ஆலங்காயம் ஒன்றியம் மற்றும் வாணியம்பாடி நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது
இத்திட்டமானது, திருப்பத்தூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகள் செந்தில் அவர்களின் மேற்பார்வையில், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி. தலைமையில் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு காலனியில் மேற்கொள்ளப்பட்டது.
கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர், DBC பணியாளர்கள் ஒரு குழு , வீடு வீடாக சென்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆக்சிசன் அளவு குறைவாக இருப்பின் அவர்களை கண்டறிந்து, பாதிப்பின் தன்மையை பொருத்து, வீட்டில் தனிமைபடுத்துவதா, கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைபடுத்துவதா, அல்லது அரசு மருத்துவமனையில் தனிமை படுத்துவதா, என்னும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இத்திட்டத்தை வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார். உடன் அனைத்து துறை பணியாளர்களும் இருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu