வாணியம்பாடியில் கண்பார்வையற்ற பட்டதாரி இளைஞருக்கு வீடு தேடி சென்று உதவி செய்த எம்எல்ஏ

வாணியம்பாடியில் கண்பார்வையற்ற பட்டதாரி இளைஞருக்கு வீடு தேடி சென்று உதவி செய்த எம்எல்ஏ
X

வாணியம்பாடியில் கண்பார்வையற்ற பட்டதாரி இளைஞருக்கு வீடு தேடி சென்று உதவி செய்த எம்எல்ஏ

வாணியம்பாடியில் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த கண்பார்வையற்ற பட்டதாரி இளைஞருக்கு வீடு தேடி சென்று உதவி செய்த எம்எல்ஏ செந்தில்குமார்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சார்ந்த வெங்கடேசன்-பானுமதி ஆகியோர் தம்பதியரின் மகன் சீனிவாசன். கண்பார்வையற்ற எம்.ஏ பட்டதாரியான இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரதுதாய் மட்டுமே வேலைக்கு சென்று அவரையும் அவரது தந்தையையும் காப்பாற்றி வருகிறார்.

தற்போது ஊரடங்கில் முற்றிலும் வாழ்வாதாரம் இழந்து மிகவும் கஷ்டப்படுவதையும், மருத்துவ உதவி கூட கிடைக்காமல், உணவுக்கும் வழியில்லாமல் வசித்து வருவதையும் அறிந்த வாணியம்பாடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார். 2 மாதத்திற்கான மளிகை பொருட்கள் தொகுப்பினை வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்.

மேலும் கண்பார்வையற்ற இளைஞருக்கு மருந்துகள் வாங்கிட பண உதவியும் செய்தார். அவருடன் கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!