வாணியம்பாடியில் மது பாட்டில்கள், கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது!

வாணியம்பாடியில் மது பாட்டில்கள், கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது!
X
வாணியம்பாடியில் மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது! 10 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் வீட்டில் மது மற்றும் கள்ளச்சாராயம் விற்பதாக வாணியம்பாடி நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் அப்போது A1 சிட்டி அருகே வீட்டில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பாரதி (வயது 55) என்ற பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!