வாணியம்பாடி அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண் கைது 260 கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண் கைது 260 கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
X
வாணியம்பாடி அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண் கைது ,260 கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல். வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை.

வாணியம்பாடி அடுத்த ஏரிக்கொல்லை வட்டம், தும்பேரி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சினி (வயது 32 ), இவர் அந்த பகுதியில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார், தும்பேரி பகுதிக்குச் சென்று அவரது வீட்டை சோதனை செய்தபோது அங்கு 260 சாராய பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து ரஞ்சினியை கைது செய்து, சாராயத்தை அந்த இடத்திலேயே அழித்தனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story