வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருந்தாளுநர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருந்தாளுநர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு
X

கொரோனாவுக்கு பலியான வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருந்தாளுநர் கலைச்செல்வி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவ பிரிவில் பணியாற்றும் மருந்தாளுநர் கலைச்செல்வி (வயது 54 ). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் காலை உயிரிழந்தார். இறந்து போன மருந்தாளுநர் கலைச்செல்வியின் கணவர் ஏற்கனவே இறந்த நிலையில், இவர்களது 2 மகன்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

மருத்துவ பிரிவில் பணியாற்றும் மருந்தாளுநர் இறந்தது சுகாதாரத் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கடந்த 10 நாட்களில் வாணியம்பாடி, ஆலங்காயம் ஆகிய பகுதிகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!