வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர் கொரோனாவுக்கு பலி

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர் கொரோனாவுக்கு பலி
X
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த முஷ்தரி பேகம் என்ற தலைமை செவிலியர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகாலமாக பணியாற்றி வந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உடல் சோர்வடைந்து காணப்பட்டதால், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை செய்ததில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி தலைமை செவிலியர் முஷ்தரி பேகம் உயிரிழந்தார்.

வாணியம்பாடியில் கடந்த 1 மாத காலத்தில் 5க்கும் மேற்பட்ட சுகாதார துறையில் பணியாற்றும் நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!