2.5 இலட்சம் மதிப்பிலான மருந்துகளை வழங்கிய தனியார் பள்ளி தாளாளர்

2.5 இலட்சம் மதிப்பிலான மருந்துகளை வழங்கிய தனியார் பள்ளி தாளாளர்
X

ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் செந்தில் மற்றும் மேக்ஸல் ஃபார்மாசுடிக்கல் உரிமையாளர் உதய்சந்தர் ஆகியோர் இணைந்து, கொரோனா சிகிச்சை மருந்தை வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதியிடம் வழங்கினர்.

வாணியம்பாடி, ஆலங்காயம்  கொரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2.5 இலட்சம் மதிப்பிலான மருந்துகளை-வட்டார மருத்துவ அலுவலரிடம் தனியார் பள்ளி தாளாளர் வழங்கினர்.

திருப்பத்தூர் மாவாட்டம் வாணியம்பாடியில் நியூ டவுன் தனியார் பெண்கள் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், மற்றும் ஆலங்காயம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, தேவையான ரூ.2.5 இலட்சம் மதிப்பிலான மருந்துகளை ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் செந்தில் மற்றும் மேக்ஸல் ஃபார்மாசுடிக்கல் உரிமையாளர் உதய்சந்தர் ஆகியோர் இணைந்து வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதியிடம் வழங்கினர். இதில் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.

Next Story
ai solutions for small business