வாணியம்பாடியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணி:துணை இயக்குனர் ஆய்வு

கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களை நேரடியாகச் சந்தித்து , தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்

வாணியம்பாடியில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துணை இயக்குனர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, திருப்பத்தூர் மாவட்ட துணை இயக்குனர் செந்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஒவ்வொரு கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களை நேரடியாகச் சந்தித்து , தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்துடன், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என பலரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture