கொரோனா நோய்க்குறி அணுகுமுறை ஆய்வு கூட்டம்

கொரோனா நோய்க்குறி அணுகுமுறை ஆய்வு கூட்டம்
X
வாணியம்பாடி நகராட்சியில் கொரோனா நோய்க்குறி அணுகுமுறை ஆய்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரோனா நோய் தீவிரமாக பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, நோய்க்குறி அணுகுமுறை (Syndromic approach) என்னும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டம் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இத்திட்டத்தில் கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர், DBC பணியாளர்கள் வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சி துறை, மற்றும் தன்னார்வலர்கள் என்று ஒரு குழுவோடு, வீடு வீடாக சென்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆக்சன் லெவல் அளவு குறைவாக இருப்பின் அவர்களை கண்டறிந்து, பாதிப்பின் தன்மையை பொருத்து, வீட்டில் தனிமைபடுத்துவதா, கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைபடுத்துவதா, அல்லது அரசு மருத்துவ மனையில் தனிமை படுத்துவதா, என்னும் கணக்கெடுப்பு நடத்த படவேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் டிஎஸ்பி பழனி செல்வம் நகராட்சி ஆணையாளர், வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி வட்டாட்சியர் மோகன் மற்றும் அனைத்து துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர்...

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!