வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம்

வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம்
X

காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி.

வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி ஏ.சி. பாபு நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி, அப்போது இருந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் வாணியம்பாடி அடுத்த நியூடவுன் ஜீவா நகர் பகுதியில் டீல் இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான குடோனில் கிடங்கில் 10 பட்டாக்கத்திகள்,10 செல்போன், 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸ் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்யாததால், நேற்று முன்தினம் மஜக நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், தனது பணியை சரியாக செய்யவில்லை என நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணி இடைநீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி ஏ.சி. பாபு நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் நேற்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிபி சக்கரவர்த்தி மாற்றப்பட்டார். தற்போது புதிதாக பாலகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!