தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக ஓவைசி கட்சி வேட்பாளர் வெற்றி

தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக ஓவைசி கட்சி வேட்பாளர் வெற்றி
X

நபிலா வக்கீல் அகமது

தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக ஏ. ஐ. எம். ஐ. எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி. இவர் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் அசாதுதீன் ஓவைசி கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டுத் தோல்வியடைந்தது.

இந்நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட 19 வது வார்டில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் பட்டம் சின்னத்தில் போட்டியிட்ட நபிலா வக்கீல் அகமது என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

அவர் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு,

நபிலா வக்கீல் அகமது, ஏ .ஐ .எம். ஐ.எம் (ஓவைசி கட்சி) 746,

ஆதிலா பேகம்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (திமுக கூட்டணி) 698,

செல்லக்கிளி- நாம் தமிழர் கட்சி.11,

கதீஜா சுயேச்சை 23 ஆகிய வாக்குகள் பெற்றனர்

தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக ஏ.ஐ. எம்.ஐ. எம் கட்சியை சேர்ந்த நபிலா வக்கீல் அகமது வெற்றிபெற்று முதல் நகரமன்ற உறுப்பினர் ஆகி உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!