லாரி டயர் வெடித்ததால் பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி விபத்து

வாணியம்பாடி அருகே லாரி டயர் வெடித்து நின்ற லாரி மீது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி விபத்து.
இடர்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த லாரி ஓட்டுனரை காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு உயிருடன் மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடப்பாவில் இருந்து பாலக்காடு நோக்கி சிமெண்ட் ரெடிமிக்ஸ் டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது.
திடீரென லாரியின் டயர் வெடித்து சாலையில் நின்றதால் பின்னால் பால் ஏற்றி வந்த மற்றொரு டேங்கர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பழுதாகி நின்ற சிமெண்ட் ரெடி மிக்ஸ் டேங்கர் லாரியின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஓட்டுநர் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் விபத்தில் லாரி இடிபாடுகளில் சிக்கி 2 கால்களும் நசுங்கிய நிலையில், உயிருக்கு போராடி தவித்தார்.
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினரை வரவழைத்து அவர்கள் உடன் சேர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் இடிபாடுகளில் இருந்து ஓட்டுநர் அருள்தாசை மீட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஓட்டுநர் அருள்தாஸ் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu