விவசாய தொழிலாளர்களுக்கு தடுப்பூசி: வட்டார மருத்துவ அலுவலர் நேரில் ஆய்வு

விவசாய தொழிலாளர்களுக்கு தடுப்பூசி: வட்டார மருத்துவ அலுவலர் நேரில் ஆய்வு
X

தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த வட்டார மருத்துவ அலுவலர்

வாணியம்பாடியில் விவசாய தொழிலாளர்களுக்குகொரோனா தடுப்பூசி வட்டார மருத்துவ அலுவலர் நேரில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோன நோய்த்தொற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆணைக்கிணங்க, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் செந்தில் வழிகாட்டுதலின் படி, ஆலங்காயம் வட்டாரத்திற்குட்பட்ட, கிரிசமுத்திரம், மதனாஞ்சேரி, ஜாப்ராபாத், தேவஸ்தானம் போன்ற கிராம ஊராட்சிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு கட்டமாக அங்குள்ள வேர்க்கடலை தோட்டத்தில் வேலை செய்த விவசாயிகளுக்கு தடுப்பூசி போடும் பணியை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சுகாதார பணியாளர்கள் இருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!