வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல்

வாணியம்பாடியில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல்
X

வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சி.எல் சாலை

வாணியம்பாடியில் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக ஏற்பட்டும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல் சாலையில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் இதனைக் கண்டும் காணாமலே தற்போது வரை இருந்து வருகிறது.

அதே நேரத்தில் போக்குவரத்து காவல் துறையினர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு வரக்கூடிய வாகனங்களை சோதனை செய்வது போல் நிற்கிறார்களே தவிர போக்குவரத்து நெரிசல் ஆக இருக்கக் கூடிய இடங்களில் அதனை சரிசெய்ய முனைப்பு காட்டுவதில்லை. மேலும் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து அதனை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் சாலையை அதிக அளவில் சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் இது போன்ற நிலை உள்ளது எனவே நகராட்சி நிர்வாகம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!