நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி  கோரிக்கை மனு
X

வாணியம்பாடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க தண்ணீரில் நடந்து வந்த வணிகர்கள் 

வாணியம்பாடியில் அனைத்து வணிகர்கள் ஒன்றிணைந்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நகராட்சியில் கோரிக்கை மனு கொடுத்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி அதனுடைய உபரி நீரானது தற்பொழுது வாணியம்பாடி நகரப்பகுதியில் சூழ்ந்துள்ளது. இதனால் பிரதான சாலையான சி.எல் சாலை, மலங்ரோடு, அரசு மருத்துவமனை சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடுகிறது.

இந்நிலையில் அனைத்து வணிகர் சங்கம் மற்றும் வணிகர்கள் சார்பில், நீர் நிலைகள் செல்லக்கூடிய கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அதனை அகற்றி நீர் நிலைகளை சரியான பாதையில் திருப்ப நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

வணிகர்கள் 300க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து ஒன்று கூடி ஜின்னா மேம்பாலம் இருந்து முக்கிய சாலை வழியாக வாரசந்தைசாலை, சி.எல் சாலை, பேருந்து நிலையம் வழியாக தண்ணீரில் நடந்தவாறு நகராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆக்ரமிப்புகளை அகற்ற மனுக்களை கொடுத்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!