திருப்பத்தூரில் கள்ளச்சாராய தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ஊக்க பரிசு

திருப்பத்தூரில் கள்ளச்சாராய தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ஊக்க பரிசு
X

திருப்பத்தூரில் கள்ளச்சாராய தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் ஊக்க பரிசுகள் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு பாராட்டி ஊக்க பரிசுகளை எஸ்.பி விஜயகுமார் வழங்கினார்.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது.

இதன் காரணமாக கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து சாராய வியாபாரிகள் மதுபான பாட்டில்களை ரயில் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் கொண்டுவந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டனர்

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி விஜயகுமாருக்கு கிடைத்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் துணை ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனையை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் இதுவரையில் சுமார் 5000 வெளிமாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் சுமார் 30000 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல்கள் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் கள்ளசாராயம் ஆகியவற்றை அழித்தனர்.

காவல்துறையின் அதிரடி நடவடிக்கையை பாராட்டி மாவட்ட எஸ்.பி டாக்டர் விஜயகுமார் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு வருகை தந்து மாவட்டத்தில் சாராய தடுப்பு பணியில் ஈடுபட்ட தனிப்படை காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர் மற்றும் போலீசாரை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!