வாணியம்பாடி கொள்ளைவழக்கில் 3 பேர் கைது: நகைகள், பொருட்கள் மீட்பு

வாணியம்பாடி  கொள்ளைவழக்கில் 3 பேர் கைது: நகைகள், பொருட்கள் மீட்பு
X

வாணியம்பாடியில் வீட்டில் கொள்ளையடித்த மூவர் 

வாணியம்பாடி பேராசிரியர் வீட்டில்35  சவரன் நகை பணம் கொள்ளையடித்த மூவர் கைது. 12 சவரன் நகைகள், லேப்டாப், வாட்ச் ஆகியவை மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பேராசிரியர் நகர் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் அப்துல் வஹாப். இவர் கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த போது அவருடைய வீட்டின் கதவை உடைக்கத்து 35 சவரன் தங்க நகைகள், ரூபாய் 3 லட்சம் ரொக்கம் ஒரு லேப்டாப் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் தனிப்படை போலீசார் நியூடவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்துக்கிடமான மூன்று பேர் போலீசாரை கண்டு பதுங்கிய போது அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் வசந்தகுமார் , கோட்டைப் பகுதியை சேர்ந்த அஸ்கர் அலி ஆகிய 3 பேர் என்பதும் கடந்த 20 ஆம் தேதி பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்த 12 சவரன் நகை மற்றும் லேப்டாப் , 2 வாட்ச், டேப் உள்ளிட்டவைகளை அவர்களிடம் பறிமுதல் செய்து வாணியம்பாடி நீதிமன்ற நீதிதுறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil