வாணியம்பாடியில் கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபர் கைது

வாணியம்பாடியில் கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபர் கைது
X

கைதான பாண்டியன்.

வாணியம்பாடியில் கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி ரோடு, தனியார் வங்கி அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் , மர்மநபர் ஒருவர், உண்டியலை உடைத்துள்ளார். க்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்துபோது, அங்கிருந்து மர்மநபர் தப்பி ச் சென்றார்.

இதுதொடர்பாக, நகர காவல்நிலையத்தில், கோவில் நிர்வாகி கலைமூர்த்தி புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடனை தேடி வந்தனர். வாணியம்பாடி பகுதியில் சுற்றித்திரிந்த கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் பாபணபள்ளி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பதும், உண்டியலை உடைத்து திருட முயன்றதையும் ஒப்புக் கொண்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!