வாணியம்பாடியில் பூட்டிய வீட்டில் பீரோக்கள் உடைத்து கொள்ளை. எஸ்பி நேரில் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர், அபூபக்கர் தெருவை சேர்ந்த நூரே சபா இவரது கணவர் அதாவுர் ரஹமான் சென்னையில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
நூரே சபா அவரது குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் தனது தாய் ஷர்புன் நிசா உடல் நலக்குறைவு காரணமாக வாணியம்பாடி நீலீக் கொள்ளை பகுதியிலுள்ள உறவினர்கள் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை பார்க்க நேற்று இரவு சென்ற நிலையில் அங்கேயே தங்கி இருந்துள்ளார்.
பின்னர் இன்று மாலை வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் இரண்டு அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் வைத்திருந்த 95 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப்பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நூரே சபா வாணியம்பாடி நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டிஎஸ்பி பழனி செல்வம் மற்றும் போலீஸார் ஆய்வு செய்த போது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள இரும்பு கிரிலை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நேரில் ஆய்வு செய்து கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடையங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் மூன்று இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்
வாணியம்பாடி பகுதியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 40 லட்சம் தங்க நகைகள், ரூ. 2.65 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu