பரிசோதனைக்கு சென்ற அதிகாரிகளை விரட்டிய மலைவாழ் மக்கள்
கிராமமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியாட்கள் உள்ளே வரவேண்டாம் கிராமத்தில் இருந்து யாரும் வெளியே செல்லக் கூடாது என எச்சரிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது மாதகடப்பா மலை கிராமம். இந்த மலை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த மூன்று தினங்களுக்கு தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதனால் கிராம மக்கள் இறுதி சடங்கில் பங்கேற்றனர். அதை தொடர்ந்து ஒரு சில நபர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஆலங்காயம் வட்டார மருத்துவ குழு மூலம் மலை கிராமத்திற்கு சென்று பரிசோதனை செய்தனர். அப்போது கிராமத்தில் இருந்த 74 பேருக்கு பரிசோதனை செய்ததில் 24 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து மலை கிராமத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கிராமத்தில் இருந்து யாரும் வெளியேற வேண்டாம் என்றும் கிராமத்திற்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் சாலையை அடைத்து உள்ளனர். சுகாதாரத் துறையை முகாமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 24 பேரில் 23 பேர்களை சுகாதாரத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ஒருவர் மட்டும் மருத்துவமனைக்கு வராமல் கிராமத்திலேயே இருக்கின்றனர். மேலும் நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய இன்று சென்ற ஆலங்காயம் வட்டார மருத்துவ குழுவினரை கிராமமக்கள் அவதூறாக பேசி வெளியேற்றினர்
இதை குறித்து மருத்துவ குழுவினரும் கேட்டபோது,
மாதகடப்பா கிராமத்திற்கு அருகே ஆந்திரா பகுதி என்பதால் அங்கு அதிகளவில் மக்கள் சென்று வருவதாகவும், இதனால் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதாகவும் கூறுகின்றனர். மேலும் கிராமத்தில் 74 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு 24 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் நோய்தொற்று பாதிக்கப்பட்டு தொடர்பில் உள்ளவர்களை பரிசோதனை செய்ய சென்றோம், அப்போது அவர்கள் தங்களை அவதூராக பேசி விரட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் இல்லாமல் எங்களையும் தூய்மை பணியாளர்களும் அந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டு வீடுகளுக்கு கிருமி நாசினி தெளிக்க கூட அனுமதிக்காமல் மிரட்டுகின்றனர் என்றும், அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, நாங்கள் பணம் பெற்று கொள்வதாக அவர்கள் எங்களை கேவலமாக பேசுகின்றனர். காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளோம் இன்னும் காவல்துறையினர் வரவில்லை வந்த பின்பு அனைவருக்கும் பரிசோதனை செய்வோம் என்று தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர் மருத்துவ குழுவினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu