வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி  ஒப்பந்த பணியாளர்  உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி  ஒப்பந்த பணியாளர்  உயிரிழப்பு
X

மாற்றப்படும் மின்கம்பம் 

வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி  ஒப்பந்த பணியாளர்  உயிரிழப்பு.

வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இராமநாயக்கன் பேட்டை, மல்லங்குப்பம் பகுதியில் மின்கம்பம் மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் மின் கம்பத்தை மாற்ற முயன்ற போது , சிகரனய்பள்ளி பகுதியை சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த பணியாளர் நாகராஜ் (வயது 24) என்பவர் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இவர் கடந்த 5 வருடங்களாக ஒப்பந்தப் பணியில் மின்சார வாரியத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் மின்சார பணியின் போது மின் நிறுத்தம் செய்யாமலேயே மின் கம்பம் மாற்றும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உள்ள விவசாய நிலத்திற்கு வரக்கூடிய மின்சாரத்தின் அளவு 11 kv மின்சாரம். இதனால் அவர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவரை மீட்டு இராமநாயக்கன் பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தோம். அப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இனிமேலாவது மின்வாரிய பணியாளர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு கம்பம் மாற்றும் பணியை தொடரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story