வாணியம்பாடியில் இன்று கோடை மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது

வாணியம்பாடியில் இன்று கோடை மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது
X

வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பெய்த கோடை மழையில். சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வாணியம்பாடியில் இன்று திடீரென கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கோடை மழை பெய்தது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகி இருந்த நிலையில் இன்று திடீரென கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை