வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்மந்தி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் இவருடைய மகன் விக்னேஷ் (வயது 16) வடச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இன்று அவருடைய செல்போனை வீட்டில் சார்ஜ் போட்டுள்ளார் அப்பொழுது சரிவர சார்ஜ் ஏறவில்லை என தெரிகிறது. இதனால் சுவிட்ச் பிராப்ளம் என மின்சார பாக்ஸில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர், தகவலறிந்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே செல்போன் சார்ஜ் போடுவதற்காக மின்சார பாக்சில் சரி செய்யும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu