வாணியம்பாடி பகுதியில் இரவில் உலா வரும் மர்ம நபர்கள்: பொதுமக்கள் அச்சம்

வாணியம்பாடி பகுதியில் இரவில் உலா வரும் மர்ம நபர்கள்: பொதுமக்கள் அச்சம்
X
வாணியம்பாடி ஏப்பா நகர் பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீதிகளில் உலா வருவதால் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதி ஏப்பா நகரில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளின் கதவுகளை தட்டுவதும், செல்போனில் வீடுகளை படம் பிடித்து செல்வதும் சிசி டிவி கேமராக்களில் பதிவாகி உள்ளதை கண்டு அச்சம் அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பகுதி மக்கள் காவல் துணை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் ரோந்து கேட்டு மனு அளித்துள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது