ஆலங்காயம் மற்றும் உதயேந்திரம் பேரூராட்சிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்

ஆலங்காயம் மற்றும் உதயேந்திரம் பேரூராட்சிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்
X

ஆலங்காயத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மற்றும் உதயேந்திரம் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மற்றும் உதயேந்திரம் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு 1 வார்டுக்கு ஒரு மருத்துவ குழு வீதம் சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

உடன் மருத்துவ அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சுயஉதவி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!