ஆலங்காயத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி

ஆலங்காயத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி
X

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு நடைபெற்ற தடுப்பூசி முகாம்

ஆலங்காயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடு தேடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் வணிகம் மற்றும் தொழில் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா கூறியிருந்தார்.

இந்தநிலையில் கலெக்டர் ஆணைக்கிணங்க, வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கபுரம் மலையடிவாரத்தில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வட்டார மருத்துவ அலுவலர், பசுபதி தலைமையில் நடைபெற்றது அங்கு பணி புரியும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு.

அதன் பின்னர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது முகாமை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை ஆட்சியர் பானுமதி நேரில் ஆய்வு மேற்கொண்டார் இதில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் தேவகுமார், மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்