வாணியம்பாடி அருகே சிறப்பு கிராமசபை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

வாணியம்பாடி அருகே சிறப்பு கிராமசபை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
X

ஆலங்காயம் ஒன்றியம் பெத்தவேப்பம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்

வாணியம்பாடி அருகே நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டங்களில் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் பங்கேற்பு

தமிழக அரசு சார்பில் அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டு இருந்தது, அதன்படி திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள பள்ளி வளாகம் எதிரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார், எம்எல்ஏ., ஒன்றிய குழுத்தலைவர் சங்கீதா பாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஊராட்சியில் நடத்தப்பட வேண்டிய சிறப்பு பணிகள் குறித்தும், பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பது குறித்தும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர கூறுதல் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிக்கும் வகையில் உள்ள துண்டு தோல்கள் மூலம் தீவனம் தயாரிப்பதாக கூறப்படும் தொழிற்சாலையை உடனடியாக மூடவும், வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர், பெத்த வேப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள துவக்கப் பள்ளிகள் மிகவும் பழுதடைந்துள்ளது எனவும், மாணவ-மாணவிகள் அமர்ந்துபடிக்க முடியாத நிலை உள்ளதாகவும், அதனை சீரமைக்க வேண்டும் என எம்.எல் ஏ, இடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கிருந்த கட்டிடங்களையும் பார்த்து ஆய்வு செய்து உடனடியாக கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மையத்திற்குச் சென்று மாணவர்களிடம் சத்துணவு சமையல் எவ்வாறு உள்ளது என கேட்டு அறிந்தார்.

இந்த ஆய்வின்போது ஒன்றியக் குழுத் தலைவர் சங்கீதாபாரி, ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.முருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

இதேபோல் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டை கிராமத்தில் நடந்த சிறப்பு ஊராட்சி மன்ற கூட்டத்திற்கு அதன் தலைவர் அருணா குப்புசாமி தலைமை தாங்கினார் ஒன்றியக்குழு உறுப்பினர் முரளி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!