வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை சோதனைச் சாவடியில் எஸ்.பி ஆய்வு

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை சோதனைச் சாவடியில் எஸ்.பி ஆய்வு
X

தமிழக ஆந்திர எல்லை சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட எஸ்பி பாலகிருஷ்ணன்

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் எஸ்.பி பாலகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அண்ணாநகரில் உள்ள செக்போஸ்ட் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதேபோன்று மலைப்பகுதி இருக்கக்கூடிய மாதகடப்பா செக் போஸ்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது காவலர்கள் தங்குவதற்கு ஓலைக் குடிசை அமைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்ட அவர், ஓலைக்குடிசை அகற்றி காவலர்கள் பாதுகாப்பாக இருக்க தகரத்தால் செய்யப்பட்ட அறை அமைத்து கொடுக்க உத்தரவிட்டார்.

மேலும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவும், பாதுகாப்பு பணியில் இருக்கக்கூடிய காவலர்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்

Tags

Next Story
ai in future agriculture