உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகன்: பத்திரமாக மீட்டுத்தர பெற்றோர் கோரிக்கை

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகன்: பத்திரமாக மீட்டுத்தர பெற்றோர் கோரிக்கை
X

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவரின் பெற்றோர்.

உக்ரைனில் சிக்கி தவிக்கும் வாணியம்பாடி மருத்துவ மாணவரை மீட்டுத்தர கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை.

உக்ரைனில் சிக்கி தவிக்கும் வாணியம்பாடி மருத்துவ மாணவரை மீட்டுத்தர கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அன்சர் என்பவரின் மகன் முகமத் ஷீன் உக்ரைன் நாட்டில் உள்ள யுவானோ பிரான்சிஸ் என்ற மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அங்கு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அங்கு தன்னுடைய மகன் தங்கியுள்ளதற்கு அருகிலேயே குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதற்கு தமிழக முதலமைச்சர், மற்றும் பிரதமர் தலையிட்டு உடனடியாக தமிழக மாணவர்களை மீட்டு தங்களிடம் சேர்க்க வேண்டும் என்றும் மன்றாடி கண்ணீர் மல்க கூறினார். மேலும் நன்றாக படித்த நன்றாக மதிப்பெண் எடுத்த மகனை நீட் தேர்வு காரணமாகவே அங்கு படிக்க வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று தங்கள் ஆவேசத்தை கொட்டி தீர்த்தனர்.

Tags

Next Story
ai marketing future