வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்

வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி  கொண்டு  செல்லப்பட்ட பணம் பறிமுதல்
X

ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினர் 

வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ. 79, 500 பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பெரியபேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியாக கந்திலி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.79 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை கொண்டு சென்றார்.

ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை வாணியம்பாடி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!