வாணியம்பாடியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வருகை

வாணியம்பாடியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வருகை
X

வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை வரவேற்ற வருவாய் துறை அதிகாரிகள்

வாணியம்பாடிக்கு வருகை தந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்

குடியரசு தின விழாவில் பங்கேற்க வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி தமிழ்நாடு முழுவதும் மக்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

அதன்படி வாணியம்பாடி பைபாஸ் சாலை வழியாக நியூடவுன் வந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம், நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபு, மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் என பலர் மலர் தூவி வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆம்பூர் பகுதிக்கு சென்றது அங்கு அலங்கார ஊர்தியை வரவேற்ற வருவாய்த்துறை மற்றும் அதிகாரிகள் அதற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் அங்கிருந்த மக்கள் வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டும் செல்பி எடுத்துக் கொண்டும் ஆரவாரத்துடன் பார்த்து ரசித்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!