100% தடுப்பூசி செலுத்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் தீர்மானம்

100% தடுப்பூசி செலுத்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் தீர்மானம்
X

கோவிந்தாபுரம் கிராம சபை கூட்டத்தில் தடுப்பூசி முகாம் 

கூட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை ஊராட்சியாக இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட, கோவிந்தாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் தீர்மானங்கள் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்ற படுவதாக உறுதியளித்தனர்.

இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை ஊராட்சியாக இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில், கிராம சபாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!