வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
X

தீயணைப்புத்துறையினரால் மீட்கப்படும் பசுமாடு.

வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு, மாந்தோப்பு பகுதியை சேர்ந்த விவசாயி விக்னேஷ் என்பவர் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நேற்று தனது பசு மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்தபோது திடீரென மாடு வேகமாகச் சென்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

பசு மாட்டை மீட்க விவசாயி விக்னேஷ் மற்றும் அருகிலிருந்தவர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும் மீட்க முடியாத நிலையில் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கயிறுகளை கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!