தும்பேரியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை

தும்பேரியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை
X

சேறும் சகதியுமாக காணப்படும் சாலை 

நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த இரண்டு வாரத்துக்கு மேலாக மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தும்பேரி கூட்ரோட்டில் இருந்து திம்மாம்பேட்டை செல்லக் கூடிய பிரதான சாலையாக உள்ள இந்த சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இவ்வழியாக பயணம் செய்யும் மக்கள் கடும் அவதிப்பட்டு செல்கின்றன.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமம், அரசு அதிகாரியிடமும் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளதால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம், கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!