திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில்  250 மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில்  250 மின்கம்பங்கள் மாற்றியமைப்பு
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில்  250 மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி நகரம், ஆலங்காயம், திம்மாம்பேட்டை, உதயேந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்கள் பல இடங்களில் பழுதடைந்து உள்ளதாகவும், இதனை மாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் வாணியம்பாடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாட்சா முகமது உத்தரவின் பேரில், உதவி செயற்பொறியாளர்கள் கந்தன், இக்பால் அகமது தலைமையில் வாணியம்பாடி கோட்டத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த மின் கம்பங்கள் மாற்றும் பணியில் 50 மின் வாரிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர், தொடர்ந்து இந்த பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் பழுதடைந்து உள்ள அனைத்து கம்பங்களும் மாற்றப்படும் எனவும், தடையில்லா மின்சாரம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மின்வாரிய அதிகாரி தெரிவித்தார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு