வாணியம்பாடியில் 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்

வாணியம்பாடியில் 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்
X

5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்

வாணியம்பாடியில் 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல். ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடில்லி பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலத்துக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நியூடில்லி பகுதியிலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் லாரியை நிறுத்தினர். அதிலிருந்த ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் லாரியை சோதனை செய்தனர்

அப்போது லாரியில் ரேஷன் அரிசி ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சுமார் 5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல் செய்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்து நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare technology