கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக சாலைகளில் தேங்கும் மழைநீர்

கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக சாலைகளில் தேங்கும் மழைநீர்
X

வாணியம்பாடியில் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாலத்தில் தேங்கி கிடக்கும் மழைநீர்

வாணியம்பாடியில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் சாலைகள் முழுவதும் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கிறது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் விடிய விடிய பெய்த கனமழையால் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது இந்நிலையில் நகராட்சிக்கு முழுவதும் 36 வார்டுகள் உள்ளன. இதில் பெருமாள்பேட்டை, நேதாஜி நகர், நியூ டவுன் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் மழைநீர் கால்வாய் வழியாக செல்ல முடியாமல் வெளியேறி சாலைகளில் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது.

இந்த மழை நீரானது வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மேம்பாலம் வரை தற்போது தேங்கி உள்ளது. இதனால் அவ்வழியாக சொல்லக்கூடிய பேருந்து, ஆட்டோ, இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள், என்று சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து வாகனங்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளது


அதுமட்டுமில்லாமல் வளையாம்பட்டு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 36 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கிடங்கும் அங்கு அமைக்கப்பட்டுள்ளதால், நகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் அச்சாலையில் பயன்படுத்துவதால் வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நின்று உள்ளது. குறுகலான சாலைகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க அரசு சார்பில் வழங்கப்பட்ட பேட்டரி குப்பை வாகனங்கள் மழை நீரால் தேங்கியுள்ள தண்ணீரில் சிக்கி பழுதாகி உள்ளது,

மேலும் அங்கு கட்டப்பட்டிருக்கும் குப்பைகளில் மழை நீரும் சேர்ந்து சாலைகளில் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு நீரும் கலந்து செல்வதால் நோய் தொற்று பரவும் அபாய நிலையும் உள்ளது

உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து இப்பணியை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Tags

Next Story